அதிபத்தர்
அப்பூதியடிகள்
அமர்நீதி நாயனார்
அரிவாட்டாய நாயனார்
ஆனாய நாயனார்
இசைஞானியார்
இடங்கழி நாயனார்
இயற்பகை நாயனார்
இளையான்குடிமாறார்
உருத்திரபசுபதி நாயனார்
எறிபத்த நாயனார்
ஏயர்கோன் கலிகாமர்
ஏனாதி நாதர்
ஐயடிகள் காடவர்கோன்
கணநாதர்
கணம்புல்லர்
கண்ணப்பர்
கலிய நாயனார்
கழறிற்றறிவார்
கழற்சிங்கர்
காரி நாயனார்
காரைக்கால் அம்மையார்
குங்கிலியகலையனார்
குலச்சிறையார்
கூற்றுவர் ( சேரமான் பெருமான் )
கலிக்கம்ப நாயனார்
கோச்செங்கட் சோழன்
கோட்புலி நாயனார்
சடைய நாயனார்
சண்டேசுவர நாயனார்
சத்தி நாயனார்
சாக்கியர்
சிறப்புலி நாயனார்
சிறுதொண்டர்
சுந்தரமூர்த்தி நாயனார்
செருத்துணை நாயனார்
சோமசிமாறர்
தண்டியடிகள்
திருக்குறிப்புத் தொண்டர்
திருஞானசம்பந்தமூர்த்தி
திருநாவுக்கரசர்
திருநாளை போவார்
திருநீலகண்டர்
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்
திருமூலர்
நமிநந்தியடிகள்
நரசிங்க முனையர்
நின்றசீர் நெடுமாறன்
நேச நாயனார்
புகழ்ச் சோழ நாயனார்
புகழ்த்துணை நாயனார்
பூசலார்
பெருமிழலைக் குறும்பர்
மங்கையர்க்கரசியார்
மானக்கஞ்சாற நாயனார்
முருக நாயனார்
முனையடுவார் நாயனார்
மூர்க்க நாயனார்
மூர்த்தி நாயனார்
மெய்ப்பொருள் நாயனார்
வாயிலார் நாயனார்
விறன்மிண்ட நாயனார்
தில்லை வாழ் அந்தணர்
பொய்யடிமையில்லாத புலவர்
பத்தராய்ப் பணிவார்கள்
பரமனையே பாடுவார்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்
திருவாரூர்ப் பிறந்தார்
முப்போதும் திருமேனி தீண்டுவார்
முழுநீறு பூசிய முனிவர்
அப்பாலும் அடிசார்ந்தார்

இடங்கழி நாயனார் - Idankazhi Nayanar

Guru poosai: ஐப்பசி - கார்த்திகை


"மடல் சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.


இடங்கழி நாயனார் தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோராகச் சோழர் குடியில் தோன்றினார்; கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் தங்கியிருந்து வேளிர் குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தார். சைவநெறி வைதிகத்தின் தருமநெறியோடு தழைப்பத் திருகோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்சனைகள் விதிப்படி திகழச் செய்தார். சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக் கொடுக்கும் சீலமுடையவராய் ஒழுகினார். இவர் அரசு புரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எதுவும் கிடைக்காமல் மனம் தளர்ந்தார். அடியாரை அமுது செய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற்பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையில் காவலர்கள் அவரைப் பிடித்து இடங்கழியராகிய மன்னர் முன் நிறுத்தினர். இடங்கழியார், அவரைப் பார்த்து, நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர் எனக் கேட்டார். அதுகேட்ட அடியவர், நான் சிவனடியார்களைத் திருவமுது செய்விக்கும் பொருளின்மையால் இவ்வாறு செய்தேன் என்றார், அதுகேட்டு இரங்கிய மன்னர், எனக்கு இவரன்றோ பண்டாரம் என்று சொல்லிப் பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய்ச், சிவனடியார்களெல்லாரும் எனது நெற் பண்டாரம் மாத்திரமன்றி நிதிப் பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க என எங்கும் பறையறிவித்தார். அருள் வேந்தராகிய இவர் தண்ணளியால் நெடுங்காலம் திருநீற்றின் ஒளி தழைப்ப அரசு புரிந்திருந்து சிவபதம் அடைந்தார்.

 

Back to Top