அதிபத்தர்
அப்பூதியடிகள்
அமர்நீதி நாயனார்
அரிவாட்டாய நாயனார்
ஆனாய நாயனார்
இசைஞானியார்
இடங்கழி நாயனார்
இயற்பகை நாயனார்
இளையான்குடிமாறார்
உருத்திரபசுபதி நாயனார்
எறிபத்த நாயனார்
ஏயர்கோன் கலிகாமர்
ஏனாதி நாதர்
ஐயடிகள் காடவர்கோன்
கணநாதர்
கணம்புல்லர்
கண்ணப்பர்
கலிய நாயனார்
கழறிற்றறிவார்
கழற்சிங்கர்
காரி நாயனார்
காரைக்கால் அம்மையார்
குங்கிலியகலையனார்
குலச்சிறையார்
கூற்றுவர் ( சேரமான் பெருமான் )
கலிக்கம்ப நாயனார்
கோச்செங்கட் சோழன்
கோட்புலி நாயனார்
சடைய நாயனார்
சண்டேசுவர நாயனார்
சத்தி நாயனார்
சாக்கியர்
சிறப்புலி நாயனார்
சிறுதொண்டர்
சுந்தரமூர்த்தி நாயனார்
செருத்துணை நாயனார்
சோமசிமாறர்
தண்டியடிகள்
திருக்குறிப்புத் தொண்டர்
திருஞானசம்பந்தமூர்த்தி
திருநாவுக்கரசர்
திருநாளை போவார்
திருநீலகண்டர்
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்
திருமூலர்
நமிநந்தியடிகள்
நரசிங்க முனையர்
நின்றசீர் நெடுமாறன்
நேச நாயனார்
புகழ்ச் சோழ நாயனார்
புகழ்த்துணை நாயனார்
பூசலார்
பெருமிழலைக் குறும்பர்
மங்கையர்க்கரசியார்
மானக்கஞ்சாற நாயனார்
முருக நாயனார்
முனையடுவார் நாயனார்
மூர்க்க நாயனார்
மூர்த்தி நாயனார்
மெய்ப்பொருள் நாயனார்
வாயிலார் நாயனார்
விறன்மிண்ட நாயனார்
தில்லை வாழ் அந்தணர்
பொய்யடிமையில்லாத புலவர்
பத்தராய்ப் பணிவார்கள்
பரமனையே பாடுவார்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்
திருவாரூர்ப் பிறந்தார்
முப்போதும் திருமேனி தீண்டுவார்
முழுநீறு பூசிய முனிவர்
அப்பாலும் அடிசார்ந்தார்

அப்பூதியடிகள் - Apputhi Adigal

Guru poosai: தை - சதயம்


"ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை

அப்பூதி அடிகள் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.
வரலாறு
அப்பூதியடிகள் சோழ நாட்டில் திங்களூரில் வசித்தவர். மிகுந்த சிவ பக்தரான இவர், மேற்சொன்ன அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் சைவ சமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளையும், அதனால் அவருக்கு நேர்ந்த துன்பங்களையும், அவற்றையெல்லாம் இறை நம்பிக்கையைத் துணைக்கொண்டு வெற்றிகரமாகக் கடந்ததையும் கேள்விப்பட்டு அவர்மீது அளவுகடந்த பக்தி கொண்டார். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது.

அப்பூதியடிகள் நாயனார் விக்கிரகம்
திங்களூருக்கு ஒரு முறை சென்றிருந்த திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் இல்லம் சென்றார். அப்பூதியடிகள் பெருமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அமுதுண்டு செல்லுமாறு வேண்டினார். அமுது பரிமாற இலை கொண்டுவரச் சென்ற அப்பூதியடிகளின் மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். சிவனடியாரின் திருவமுதுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்று கருதி மகனின் உடலை மறைத்து விட்டு அப்பரை உணவுண்ண வருமாறு அழைத்தார். திருநாவுக்கரசரும் மூத்த மகன் எங்கே என்று வினவினார். வேறு வழியின்றி உண்மையை உரைக்கிறார் அப்பூதியடிகள். அப்பூதியடிகளின் அன்பில் மனமுருகிய திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார்.


 

Back to Top