அதிபத்தர்
அப்பூதியடிகள்
அமர்நீதி நாயனார்
அரிவாட்டாய நாயனார்
ஆனாய நாயனார்
இசைஞானியார்
இடங்கழி நாயனார்
இயற்பகை நாயனார்
இளையான்குடிமாறார்
உருத்திரபசுபதி நாயனார்
எறிபத்த நாயனார்
ஏயர்கோன் கலிகாமர்
ஏனாதி நாதர்
ஐயடிகள் காடவர்கோன்
கணநாதர்
கணம்புல்லர்
கண்ணப்பர்
கலிய நாயனார்
கழறிற்றறிவார்
கழற்சிங்கர்
காரி நாயனார்
காரைக்கால் அம்மையார்
குங்கிலியகலையனார்
குலச்சிறையார்
கூற்றுவர் ( சேரமான் பெருமான் )
கலிக்கம்ப நாயனார்
கோச்செங்கட் சோழன்
கோட்புலி நாயனார்
சடைய நாயனார்
சண்டேசுவர நாயனார்
சத்தி நாயனார்
சாக்கியர்
சிறப்புலி நாயனார்
சிறுதொண்டர்
சுந்தரமூர்த்தி நாயனார்
செருத்துணை நாயனார்
சோமசிமாறர்
தண்டியடிகள்
திருக்குறிப்புத் தொண்டர்
திருஞானசம்பந்தமூர்த்தி
திருநாவுக்கரசர்
திருநாளை போவார்
திருநீலகண்டர்
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
திருநீலநக்க நாயனார்
திருமூலர்
நமிநந்தியடிகள்
நரசிங்க முனையர்
நின்றசீர் நெடுமாறன்
நேச நாயனார்
புகழ்ச் சோழ நாயனார்
புகழ்த்துணை நாயனார்
பூசலார்
பெருமிழலைக் குறும்பர்
மங்கையர்க்கரசியார்
மானக்கஞ்சாற நாயனார்
முருக நாயனார்
முனையடுவார் நாயனார்
மூர்க்க நாயனார்
மூர்த்தி நாயனார்
மெய்ப்பொருள் நாயனார்
வாயிலார் நாயனார்
விறன்மிண்ட நாயனார்
தில்லை வாழ் அந்தணர்
பொய்யடிமையில்லாத புலவர்
பத்தராய்ப் பணிவார்கள்
பரமனையே பாடுவார்
சித்தத்தை சிவன்பாலே வைத்தார்
திருவாரூர்ப் பிறந்தார்
முப்போதும் திருமேனி தீண்டுவார்
முழுநீறு பூசிய முனிவர்
அப்பாலும் அடிசார்ந்தார்

கலிய நாயனார் - Kaliya Nayanar

Guru poosai: ஆடி - கேட்டை

தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலியநாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். 

இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போற் குறைய வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபிலுள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால் கூலிக்குச் செக்காடி அக்கூலி கொண்டு விளக்கெரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால் வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகரெங்கும் விலைகூறி வாங்குவாரில்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்க்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப்பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடன்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியிற் பொலித்திருக்க அருள் புரிந்தார்.

 

Back to Top