திருக்கோயில்களில் செய்யத் தக்கவை

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

திருக்கோயில்களில் செய்யத் தக்கவை:

  1. ஆலயப் பிரகாரங்கள், கோபுரங்கள், மதிற் சுவர்கள் முதலியவற்றிலுள்ள புல்பூண்டுகளை நீக்கி உழவாரத் திருத்தொண்டு செய்தல்.
  2. திருக்கோயிலுள்ள குப்பைகளை அகற்றுதல்.
  3. திருக்கோயிலை மெழுகி, அரிசி மாவினால் கோலங்கள் போடுதல்.
  4. கோயிலில் அவரவர் சத்திக்கேற்ப நெய், எண்ணெய், இலுப்பை நெய் ஆகியவற்றால் தீபங்கள் ஏற்றுதல்.
  5. ஆலயத்திலுள்ள நந்தவனங்களைப் பேணுதல், மலர் கொய்து, தொடுத்து இறைவனுக்கு அர்ப்பணித்தல்.
  6. அமைதி, சுத்தம், அடக்கம், ஒழுக்கம் வழிபாட்டிற்கு இன்றியமையாதன.

திருக்கோயில்களில் செய்யத் தகாதவை

  1. திருக்கோயிலை வேகமாக வலம் வரலாகாது.
  2. வீண் வார்த்தை பேசக் கூடாது.
  3. தாம்பூலம் தரித்துக் கொள்ளக் கூடாது.
  4. மேல் வேட்டியை போர்த்திக் கொண்டு செல்லல் கூடாது; இடுப்பில் கட்டிக் கொண்டு பணிவாகச் செல்ல வேண்டும்.
  5. கோயிலில் விளங்கும் மூர்த்தங்களைத் தூய்மை இல்லாமல் தொடுவதோ, அவற்றின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுதலோ கூடாது.
  6. கோயில் திருவிளக்கைக் கையால் தூண்டவோ கையைச் சுவரில் துடைக்கவோ கூடாது. தலையிலும் தடவிக் கொள்ளக் கூடாது.
  7. நிவேதனம் ஆகும் போது பார்க்கக்கூடாது.
  8. விபூதி சந்தன அபிசேகங்களைத் தவிர ஏனைய திருமஞ்ன காலங்களில் சாமியைத் தரிசனம் செய்தல் ஆகாது.
  9. கோயிலுள்ளே – மதிற்புறங்களிலே எச்சில் துப்புதல் முதலான தீய செயல்களைச் செய்தலாகாது.
  10. சண்டையிடல், மயிர்கோதி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், உறங்குதல், சிவநிர்மால்யங்களை மிதித்தல் முதலியன கூடாது.
  11. திருக்கோயிலுக்கு உரியவற்றை வீட்டிற்கு கொண்டு செல்ல நினைக்கக் கூடாது.
  12. சாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே போதல், சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல் கூடாது.

அன்பர்களுக்கு மேலும் சில அரிய செய்திகள்

1. ஆன் ஐந்து

பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோசலம்

2. ஐந்தொழில்

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளல்

3. ஐந்து மரங்கள்

கற்பகம், சந்தானம், அரிச்சந்தம், மந்தாரம், பாரிசாதம்.

4. ஐந்து கருவிகள்

தோற் கருவி (பேரிகை முதலியன), துனைக்கருவி (புல்லாங்குழல்), நரம்புக் கருவிகள் (வீணை, யாழ் முதலியன), கஞ்சக் கருவி (தாளம் முதலியன), மிடற்றுக்கருவி (கண்டாத்தால் பாடுதல்)

5. ஐந்து நறுமணங்கள்

தக்கோலம், ஏலம், இலவங்கம், கர்ப்பூரம், சாதிக்காய்

6. ஐந்து உறுப்பு வணக்கம்

தலை, கைகள், கால்கள்

7. சிவனின் ஐந்து முகங்கள்

ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் (அதோமுகமும் சேர்ந்த ஆறுமுகங்களாகவும் கொள்ளப்படும்)

8. பஞ்சாங்கம்

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்

9. இல்லற யாகம் ஐந்து

பிரமயாகம், தேவயாகம், மானுடயாகம், பிதிர் யாகம், பூதயாகம்.

10. ஐவகைச் சுத்தி

பூத சுத்தி, மந்திர சுத்தி, இலிங்கசுத்தி, திரவிய சுத்தி, ஆன்ம சுத்தி

11. பஞ்ச சபைகள் ஐந்து

திருவாலங்காடு (இரத்தின சபை), சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளியம்பலம்), திருநெல்வேலி (தாம்ர சபை), குற்றாலம் (சித்திரசபை)

12. ஐந்து பெரும் தலங்கள்

திருவாரூர் (மண்தலம்), திருவானைக்கா (நீர்த்தலம்), திருவண்ணாமலை (தீத்தலம்), திருகாளத்தி (காற்றுத்தலம்), சிதம்பரம் (வானத்தலம்)

13. உபசாரம் பதினாறு

(சோடசோபசாரம்) தவிசு அளித்தல், கைகழுவ நீர்தருதல், கால்கழுவ நீர் தருதல், மூக்குடி நீர்தருதல், நீராட்டல், ஆடைசாத்தல், முப்புரி நூல் தருதல், தேய்வைபூசல், மலர்சாத்தல், மஞ்சள் அரிசி தூவுதல், நறும்புகை காட்டல், விளக்கிடல், கர்ப்பூரம் ஏற்றல், அமுதம் ஏந்தல், அடைக்காய் தருதல், மந்திரமலரால் அருச்சித்தல்.

14. அபிடேகத் திரவியம் இருபது

எண்ணெய், மாக்காப்பு, நெல்லிக்காப்பு, மஞ்சள் காப்பு, பஞ்சகௌவியம், ரசபஞ்சாமிர்தம், பல பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், சர்க்கரை, கருப்பஞ்சாறு, எலுமிச்சைச்சாறு, நாரத்தைச் சாறு, தமரத்தம்சாறு, குளஞ்சிச் சாறு, மாதுளம்சாறு, இளநீர், சந்தனம்.

15. மங்கலம் எட்டு

சாமரம், நிறைகுடம், கண்ணாடி, தோட்டி (அங்குசம்) முரசு, விளக்கு கொடி, இணைக்கயல் (இன்னொரு வகை), இடபம், சீவற்சம், சங்கு, சுவத்திகம், சாமரம், நிறைகுடம், கண்ணாடி விளக்கு.

16. செல்வங்கள் எட்டு

அழகு, குணம், ஆயுள், குலம், செல்வம், வித்தை, விவேகம், தனம்.

17. பேறுகள் பதினாறு

புகழ், வலி, கல்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள்.

18. பஞ்ச புராணம்

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம்.

19. ஐம்பொறிகள், ஐம்புலன்கள்

மெய், வாய், கண், மூக்கு, செவி, உறுதல், உண்ணுதல், காணுதல், உயிர்த்தல், கேட்டல்.

20. அட்ட வீரட்டம்

  1. திருக்கண்டியூர்           -     பிரமனது சிரம் கொய்தது
  2. திருக்கோவலூர்    -     அந்தகாசுரனை வதைத்தது
  3. திருவதிகை        -     திரிபுரம் எரித்தது
  4. திருப்பறியலூர்           -     தக்கன்சிரம் தடிந்தது
  5. திருவிற்குடி        -     சலந்தரன் தலை அரிந்தது
  6. திருவழுவூர்        -     யானையை உரித்தது
  7. திருக்குறுக்கை           -     மன்மதனை எரித்தது
  8. திருக்கடவூர்       -     இயமனை உதைத்தது

21. முப்பத்திரண்டு அறங்கள்

  1. ஆதுலர் சாலை
  2. ஓதுவார்க்கு உணவு
  3. அறுசமயத்தோர்க்கு உண்டி
  4. பசுவிற்கு வாயுறை
  5. சிறைச் சோறு
  6. ஐயம் (கேட்க்காமல் இடுதல்)
  7. தின்பண்டம் நல்கல்
  8. அறுவைச் சோறு
  9. மகப்பெறுவித்தல்
  10. மகவு வளர்த்தல்
  11. மகப்பால் வார்த்தல்
  12. மகட்கொடை
  13. அறவைப்பிணம் சுடுதல்
  14. அறவைத் தூரியம்
  15. சுண்ணம்
  16. நோய் மருந்து
  17. துணிவெளுத்துக் கொடுத்தல்
  18. மயிர் களைய உதவல்
  19. கண்ணாடி ஈதல்
  20. காதோலை நல்கல்
  21. கண்ணோய் தீர்த்தல்
  22. தலைக்கு எண்ணெய் தருதல்
  23. பெண்பொகம்
  24. பிறர்துயர் போக்கல்
  25. தண்ணீர்ப்பந்தல் வைத்தல்
  26. திருமடம் கட்டுதல்
  27. திருக்குளம் தொட்டல்
  28. இன்னருங்கனிச் சோலைகள் செய்தல்
  29. ஆ உறிஞ்சு தறி நடுதல்
  30. விலங்கிற்குத் தீனி
  31. பொலிகாளை விடுதல்
  32. விலை கொடுத்து உயிர்காத்தல

22. நடராசர் கால் மாறி ஆடிய தலம்

மதுரை

23. காசிக்குவாசி உயர்ந்த தலங்கள்

  1. திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம் - விருத்தாகாசி), 2. திருஆலவாய் (மதுரை)

24. தலத்திற்குள் தலம்

  1. திருவாரூர் அரநெறி – திருவாரூர்
  2. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் – திருப்புகலூர்
  3. மீயச்சூர் இளங்கோயில் – மீயச்சூர்

25. பூலோக கயிலாயம்

  1. திருவையாறு, 2. திருக்குற்றாலம், 3. சிதம்பரம்

26. காயாரோகணம்

  1. கச்சிக்காரோகனம் (வைப்புத்தலம்), 2. குடந்தைக் காரோணம், 3. நாகைக் காரோணம்.

27. மயானங்கள்

  1. கச்சி மயானம், 2. கடவூர் மயானம், 3. நாலூர் மயானம்.

28. ஏழு திருமுறைகளிலும் பாடல் பெற்ற தலங்கள்

  1. திருமறைக்காடு (வேதாரண்யம்), 2. காஞ்சிபுரம், 3. திருவாரூர்.

29. முத்தி அளிக்கும் தலங்கள்

  1. திருஆரூர் – பிறக்க முத்தி தருவது
  2. சிதம்பரம் – தரிசிக்க முத்தி தருவது
  3. திருவண்ணாமலை – நினைக்க முத்தி தருவது
  4. காசி – இறக்க முத்தி தருவது

தெரிசனம் செயத்தில்லையிற் கமலையில் செனிக்க
மரணமாய்விடக் கங்கைசூழ் வாரணாசியிலே
அருணை மாநகர் நினைத்திட முத்தியஞ் செழுத்தும்
பிரணவத் தொடெப் பேர்களு முரைக்கிலும் பெறலாம்

30. அழகற் சிறந்த கோயில்கள்

  1. தேரழகு    -     திருவாரூர்
  2. வீதி அழகு      -     திருவிடை மருதூர்
  3. மதிலகு    -     திருவிரிஞ்சை
  4. விளக்கழகு -     வேதாரண்யம்

31. அம்பிகையின் ஆட்சித் தலங்கள்

  1. காஞ்சியில்      -     காமாட்சி
  2. மதுரையில்      -     மீனாட்சி
  3. காசியில்        -     விசாலாட்சி
  4. நாகையில்      -     நீலாயதாட்சி

32. நால்வர் தில்லைக் கோயிலுக்குள் சென்ற வழி

  1. திருஞானசம்பந்தர்     -     தெற்குக் கோபுர வாயில்
  2. திருநாவுக்கரசர்       -     மேற்குக் கோபுர வாயில்
  3. சுந்தரமூர்த்தி சாமிகள் -     வடக்குக் கோபுர வாயில்
  4. மாணிக்கவாசகர்       -     கிழக்குக் கோபுர வாயில்

33. புலியூர்கள்

  1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), 2. திருப்பாதிரிப்புலியூர், 3. ஓமாம்புலியூர், 4. எருக்கத்தம்புலியூர், 5. பெரும்புலியூர்

34. தாண்டவச் சிறப்புத் தலங்கள்

  1. தில்லை, பேரூர்       -     ஆனந்த தாண்டவம்
  2. திருஆரூர்            -     அசபா தாண்டவம்
  3. மதுரை               -     ஞானசுந்தர தாண்டவம்
  4. புக்கொளியூர்          -     ஊர்த்துவ தாண்டவம்
  5. திருமுருகன் பூண்டி   -     பிரம தாண்டவம்

35. சிவராத்திரி விசேடத் தலங்கள்

  1. கச்சி ஏகம்பம், 2. திருக்காளத்தி, 3. கோகர்ணம், 4. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), 5. திருவைகாவூர்

36. காசிக்கு நேர் தலங்கள்

  1. திருவெண்காடு, 2. திருவையாறு, 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5. திருச்சாய்க்காடு, 6. திருவாஞ்சியம்.

37. நந்தி சிறப்புத்தலங்கள்

நந்தி சங்கமம் தலம்          -     கூடலையாற்றூர் திருநணா (பவானி கூடல்)
நந்தி விலகியிருந்த தலங்கள்  -     பட்டீச்சுரம், திருப்புங்கூர், திருப்பூந்துருத்தி
நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம்     -     திருவெண்பாக்கம்
நந்திதேவர் நின்ற திருக்கோலம்     -     திருமாற்பேறு
நந்திதேவருக்குத் திருமணம் நடக்கும் தலம்     -     திருமழபாடி

38. கருவறையில் அம்மையப்பர் திருஉருவம் கொண்ட தலங்கள்

  1. திருநெல்வாயில் 2. திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில், 3. திருஇடும்பாவனம், 4. திருமறைக்காடு 5. திருக்கச்சி ஏகம்பம், 6. திருவேற்காடு.

39. கருவறையில் அம்மையப்பர் திருஉருவம் கொண்ட தலங்கள்

  1. திருநெல்வாயில், 2. திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில், 3. திருஇடும்பாவனம், 4. திருமறைக்காடு, 5. திருக்கச்சி ஏகம்பம், 6. திருவேற்காடு.

40. பூசை காலத்தில் சிறப்பு வழிபாட்டுத் தலங்கள்

  1. திருக்குற்றாலம்  -     திருவனந்தல் சிறப்பு
  2. இராமேச்சுரம்    -     கால பூசைச் சிறப்பு
  3. திருஆனைக்கா  -     மத்தியான பூசைச் சிறப்பு
  4. திருஆரூர்       -     சாயுங்காலப் பூசைச் சிறப்பு
  5. மதுரை          -     இராக்கால பூசைச் சிறப்பு
  6. சிதம்பரம்       -     அர்த்தசாம பூசைச் சிறப்பு

41. ஏழு விடங்க தலங்கள்

  1. திருஆரூர்       - வீதிவிடங்கர்   - அசபா நடனம்
  2. திருநள்ளாறு     - நகர (நக) விடங்கர் - உன்மத்த நடனம்
  3. திருநாகைக்காரோணம் -     சுந்தர விடங்கர்  -     வீசி நடனம்
  4. திருக்காறாயில்  -     ஆதிவிடங்கர்    -     குக்குட நடனம்
  5. திருக்கோளிலி   -     அவனிவிடங்கர்  -     பிருங்க நடனம்
  6. திருவாய்மூர்    -     நீலவிடங்கர்     -     கமல நடனம்
  7. திருமறைக்காடு  -     புவனி விடங்கர் -     கம்சபாத நடனம்

சீராரர் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு, காறாயில் – பேரான
ஒத்த திருவாய்மூர் உகந்த திருக் கோளிலி
சத்த விடங்கத் தலம்.

42. ஏழூர் விழா தலங்கள்

  1. திருவையாறு, 2. திருப்பழனம், 3. திருச்சோற்றுத்துறை, 4. திருவேதிக்குடி, 5. திருக்கண்டியூர், 6. திருப்பூந்துருத்தி, 7. திருநெய்த்தானம்.

43. பன்னிரு சோதி லிங்கத் தலங்கள்

  1. கேதாரம் (இமயம்)     -     கேதாரேசுவரர்
  2. சோமநாதம் (குஜராத்)  -     சோமநாதேசுவரர்
  3. மகாகாளேசம் (உஜ்ஜைனி) -      மகாகாளேசுவரர்
  4. விசுவநாதம்     (காசி)    
  5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்)   -     வைத்தியநாதேசுவர்
  6. பீமநாதம் (மகாராஷ்டிரம்)         -     பீமநாதேசுவரர்
  7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்)           -     நாகநாதேசுவரர்
  8. ஓங்காரேஸ்வரம் (மத்திய பிரதேசம்) - ஓங்காரேசுவரர்
  9. திரயம்பகம் (மகாராஷ்டிரம்)       -     திரயம்பகேசுவரர்
  10. குசுமேசம் (மகாராஷ்டிரம்)        -     குஸ்ருமேச்சுவரர்
  11. மல்லிகார்சுனம் – ஸ்ரீசைலம் (ஆந்திரம்) - மல்லிகார்சுனர்
  12. இராமநாதம் (இராமேஸ்வரம்)           -     இராமநாதேசுவரர்

44. சீர்காழிக்குரிய வேறு பெயர்கள்

  1. பிரமபுரம், 2. தோணிபுரம், 3. வேணுபுரம், 4. சிரபுரம், 5. புகலி, 6. சண்பை, 7. கழுமலம், 8. சீர்காழி, 9. வெங்குரு, 10. பூந்தராய், 11. புறவம், 12. கொச்சைவயம்

45. கருவறையில் விலங்குகள், பறவைகள் பூசித்துப் பேறு பெற்ற தலங்கள்

குரங்கணில் முட்டம்

அணில்

திருமணஞ்சேரி

ஆமை

திருச்சிற்றேமம், ஈங்கோய்மலை

எறும்பீச்சுரம்

எறும்பு

திருவையாறு

ஏறு

மதுரை, வலிவலம்

கரிக்குருவி

சிறுகுடி

கருடன்

கரவீரம்

கழுதை

குரங்கணில் முட்டம்

காகம்

அயவந்தி

குதிரை

குரங்காடு துறைகள்
குரங்கணில் முட்டம்
குரங்குக்கா, குரக்குத்தளி
வாலிகண்டபுரம்

குரங்கு

திருநல்லூர்

சிங்கம்

ஊற்றத்தூர் (வைப்புத்தலம்)

தவளை

திருத்து தேவன்குடி, நீடூர்

நண்டு

நாரையூர், மதுரை

நாரை

திருவாவடுதுறை, கருவூர் ஆவூர், திருக்கொண்டீச்சுரம் பட்டீச்சுரம், திருவாமாத்தூர்

பசு

சிவபுரம்

பன்றி

காளத்தி, திருப்பாம்புரம், குடந்தைக் கீழ்க்கோட்டம் திருநாகேச்சுரம், திருநாகைக்காரோணம்

பாம்பு

மயிலாப்பூர், மயிலாடுதுறை

மயில்

திருச்சேலூர்

மீன்

திருப்பாதிரிப்புலியூர்

முயல்

திருக்கானப்பேர், திருக்குற்றாலாம் மதுரை, ஆனைக்கா, காளத்தி

யானை

ஸ்ரீசைலம், வெண்டுறை, வாளொளிபுற்றூர்

வண்டு

Back to Top